திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (19:13 IST)

சிராஜ் 4 விக்கெட்டுக்கள்.. போராடி தோல்வி அடைந்த பஞ்சாப்..!

virat
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி விராத் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் அபாரமான தொடக்கம் காரணமாக நான்கு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. 
 
இதனை அடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் எடுத்தது
 
இந்த நிலையில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran