வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (06:54 IST)

ரஞ்சித் கோப்பையில் தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி.. 7 ஆண்டுக்கு பின் அரையிறுதிக்கு தகுதி..!

கடந்த சில வாரங்களாக ரஞ்சித் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கிடையே மூன்றாவது கால் இறுதி போட்டி நடந்த நிலையில் இந்த போட்டிகள் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 122 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்ததால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

தமிழ்நாடு அணியின் சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அணி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் இரண்டே போட்டிகளில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று விட்டால் ரஞ்சித் கோப்பையை கைப்பற்றி விடும் என்பதும் தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நனவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு அணி இன்னும் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva