செவ்வாய், 6 டிசம்பர் 2022
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (07:16 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: தொடரை வென்ற பாகிஸ்தான்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்ற நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும் 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வென்ற நிலையில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது 
நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி களத்தில் இறங்கியது. அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் குவித்தது. ஃபாகர் ஜமான் சதமடித்தார் என்பதும் கேப்டன் பாபர் அசாம் 94 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து 321 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 49.3 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் அசாம் ஆட்ட நாயகனாகவும் ஃபாகர் ஜமான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்