ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:14 IST)

இந்தியாவுக்கு வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி: வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

Newzeland
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் நிலையில் இந்தியாவில் விளையாட இருக்கும் நியூசிலாந்து அணி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் டி20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது
 
அதேபோல் நவம்பர் 25ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தொடங்குகிறது
 
இந்த தொடரில் விளையாடும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணியின் வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
நியூசிலாந்து டி20 அணி:- கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கெல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சவுதி, பிளெய்ர் டிக்னெர். 
 
நியூசிலாந்து ஒருநாள் அணி:- கேன் வில்லியம்சன் (கேப்டன்), பின் ஆலென், மைக்கேல் பிரேஸ்வெல், டேவான் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லதாம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் சவுதி. 
 
இந்திய டி20 அணி:- ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷூப்மன் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , முகமது. சிராஜ், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக். 
 
இந்திய ஒருநாள் அணி:- ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
 
Edited by Mahendran