ஐபிஎல் போட்டி: கொல்கத்தா Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; டாஸ் வென்ற கொல்கத்தா

KKR
Last Modified ஞாயிறு, 24 மார்ச் 2019 (15:55 IST)
கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதயிருக்கும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவெடுத்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுடன் காத்திருந்த  ஐபில் தொடரின் 12வது சீசன் நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில்  தொடங்கியது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, கோலி தலைமையிலான பெங்களூர் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.
 
இந்நிலையில் இன்று கொல்கத்தா நைரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதும் 2வது ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள் ஈடன் மைதானத்தில் சரியாக 4 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக கொல்கத்தா அணி விளையாடிய முதல் ஆட்டங்களில் தோற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :