வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (09:47 IST)

டி.ஆர்.எஸ், பீல்டிங் சொதப்பல், பனிப்பொழிவு எல்லாம் காரணம் – தோல்வி குறித்து கோஹ்லி !

மொஹாலியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தும் இந்தியா தோல்வியடைந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி மிகச்சிறந்த பவுலிங் கொண்ட அணி என வர்ணிக்கப்படும் இந்திய அணி 358 ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் நேற்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இந்த ஆட்டம் குறித்தும் தோல்வி குறித்தும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தனது அதிருப்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் ‘கடந்த 2 ஆட்டங்களிலும் பனிப்பொழிவின் தவறான பக்கத்தில் நாங்கள் அகப்பட்டோம். கடைசி சில ஓவர்களில் 5 வாய்ப்புகளை கோட்டை விட்டோம் என்பது  ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். டர்னர், ஹான்ஸ்கோம்ப் மற்றும் கவாஜா ஆகிய மூவரும் அபாரமாக ஆடினர். அவர்கள் நன்றாக ஆடினர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். போட்டியின் எந்த ஓவர்களில் அடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து சிறப்பாக விளையாடினர். மிக முக்கியமான ஸ்டம்பிங் ஒன்றை தவறவிட்டோம். பீல்டிங்கில் சொதப்பினோம்.’ எனக் கூறினார்.

மேலும் சர்ச்சையான டிஆர்எஸ் முடிவு குறித்துப் பேசுகையில் ‘டி.ஆர்.எஸ். முடிவு அதிர்ச்சியளித்தது. ஒவ்வொரு போட்டியிலும் அது ஒரு பேசுபொருளாக மாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி 2 முறை எங்கள் கண்களைத் திறந்துவிட்டது.  இந்தத் தோல்வி நிச்சயம் காயப்படுத்தும், ஆனால் சரியான வழியில் காயப்படுத்தும்.கடைசி போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.