பிருத்வி ஷாவை அழைப்பது மற்ற வீரர்களை அவமானப்படுத்துவது போல… கபில்தேவ் கருத்து!

Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (10:31 IST)

இந்திய வீரர் ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்று வீரராக பிருத்வி ஷாவை அழைக்க உள்ளதாக இந்திய அணி தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் காயம் காரணமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரின் உடலில் உள்காயங்கள் இருப்பதால் அதற்கான சிகிச்சை எடுக்காமல் விளையாடினால் காயம் மேலும் அதிகமாகலாம் என்பதால் அவர் தொடரின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவருக்குப் பதில் மாற்று வீரராக பிருத்வி ஷாவை அழைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ‘பிருத்வி ஷாவை மாற்று வீரராக அழைப்பது என்பது அணியில் இருக்கும் மற்ற தொடக்க வீரர்களை அவமதிப்பது போன்றதாகும். அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட மயங்க் அகர்வால், கே எல் ராகுல் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் உள்ளனர். அதனால் புதிய தொடக்க ஆட்டக்காரர் தேவையில்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :