திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (08:27 IST)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் பின்னடைவு… முக்கிய வீரர் விளையாடுவது சந்தேகம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரராக விளங்கிவரும் ஜோப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடிய போது அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட விளையாடாமல் இங்கிலாந்துக்கு திரும்பி செல்கிறார். இந்நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.