செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2023 (22:25 IST)

ஐசிசி டாப் 10 பட்டியலில் இந்திய வீராங்கனை முன்னேற்றம்!

deepti sharma
ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த வீராங்கனைக்கான டாப் 10 பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா   2 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டி நடந்து வருகிறது.

நேற்று நடந்த போட்டியில், இந்தியா அணி வெஸ்ட் இண்டீஸை  வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டியில், சிறப்பாகப் பந்து வீச்சிய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாயகி விருது பெற்றார்.

இந்த நிலையில், ஐசிசி மகளிர் டி-20 போட்டிக்கான பந்து வீச்சாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.


அதில், 773 புள்ளிகளுடன் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா   2 வது இடத்தைப் பிடித்துள்ளார். ராஜேஸ்வரி 7 இடங்கள் முன்னேறி 14 வது இடத்தில் உள்ளார்.