திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (18:28 IST)

3வது ஒருநாள் போட்டி.. ருத்ராஜூக்கு பதிலாக களமிறங்கிய வீரர்.. ஸ்கோர் விவரம்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி  டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ருத்ராஜுக்கு பதில் ரஜத் படிதார் களமிறங்கிய நிலையில் அவர் 22 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

சாய் சுதர்சன் 10 ரன்களில் அவுட் ஆக தற்போது சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா விளையாடி வருகின்றனர். சற்றுமுன் வரை இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Mahendran