1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 நவம்பர் 2023 (07:48 IST)

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2வது20 ஓவர் போட்டி: மழைக்கு வாய்ப்பு என தகவல்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான  டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று  திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா ஆஸ்திரேலியா அணியில் சேர்ந்த வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளா முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றைய வானிலை அறிவிப்பின்படி இன்று மாலை திருவனந்தபுரத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று கூறப்படுகிறது.

எனவே முழுமையாக போட்டி நடைபெறுமா? அல்லது ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  இன்றைய போட்டியில் தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியாவும், தொடரை வெல்ல இந்தியாவும் தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva