ஐபிஎல் கிரிக்கெட்டை சேவாக் காப்பாற்றியுள்ளார்: புறக்கணித்தவர்களுக்கு கெயில் பதிலடி!

Last Updated: வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (13:11 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்ட் கெயில் அதிரடியாக சதமடித்தார். 
 
இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதற்கு கெயில் ஒரு முக்கிய காரணம். அதோடி நேற்று வர ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனின் போட்டிகளில் இதுவே முதல் சதம். கிறிஸ்ட் கெய்ல் 104 ரன்கள் அடித்தார். (63 பந்து, ஒரு பவுண்டரி, 11 சிக்சர்).
 
போட்டிக்கு பின்னர் கெயில் பின்வருமாறு பேசினார், ஐபிஎல் ஏலத்தில் என்னை எடுத்து ஐபிஎல் கிரிக்கெட்டை வாழவைத்ததே, கிங்ஸ் லெவன் கிங் சேவக்தான். நான் சாதிக்கமாட்டேன் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் எனது பெயரின் மரியாதையை நான் காப்பாற்ற வேண்டும் என்றார். 
ஐபிஎல் ஏலத்தில் யாரும் கண்டுகொள்ளாத கிறிஸ் கெயில், பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் சூறாவளியாக சுத்தி அடித்து, தன்னை புறக்கணித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :