உலகக் கோப்பை கால்பந்து 2014: ஜெர்மனி உலக சாம்பியன்

உலகக் கோப்பை கால்பந்து 2014: ஜெர்மனி உலக சாம்பியன்
Ilavarasan| Last Updated: திங்கள், 14 ஜூலை 2014 (18:15 IST)
2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை 1/0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.
47 ஆவது நிமிடத்தில் மெஸ்சி மிஸ் பண்ணிய கோல் ஜெர்மனிக்கு மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. 113 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோட்சே அடித்த சிறப்பான கோலே ஆட்ட முடிவை நிர்ணயித்தது.
 
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமமாக விளையாடி வந்தன. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் அதிகப்படியான நேரம் கொடுக்கப்பட்டது. 
 
113 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோட்சே அடித்த திறமையான கோலே வெற்றிக்கு வழி வகுத்தது.
 
கடைசி வரை அர்ஜெண்டினா எந்த கோலும் அடிக்காததால் ஜெர்மனி வெற்றி பெற்று உலகக் கோப்பையை தட்டிச் சென்றது.


இதில் மேலும் படிக்கவும் :