1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (23:17 IST)

லக்னோவை வீழ்த்தியது டெல்லி அணி.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலிலும் உயர்ந்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் கடைசியாக களம் இறங்கிய ஆயுஷ் படோன்  55 ரன்கள் எடுத்திருந்தார். டெல்லி அணியை பொருத்தமட்டில் குல்தீப் யாதவ் அபாரமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் கலில் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 168 என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணியின் ஜேக் பிரேசர் 55 ரன்கள் எடுத்திருந்தார் 
 
இந்த நிலையில் இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணியின் புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது  இடத்தில் உள்ளது . இதனால் பெங்களூர் அணி கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva