திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (17:03 IST)

நீங்கள் நிலவில் போட்டி நடத்தினாலும்.. அங்கே சி.எஸ்.கே. ரசிகர்கள் வருவார்கள்: இர்ஃபான் பதான்

நீங்கள் நிலவில் போட்டியை நடத்தினாலும் சிஎஸ்கே ரசிகர்கள் அங்கும் வருவார்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 
இன்று அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. சற்றுமுன் வெளியான தகவலின்படி மைதானத்தில் அகமதாபாத் மைதானத்தில் வெயில் அடித்துக் கொண்டிருப்பதால் இன்று போட்டி முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் மைதானத்தை நோக்கி தற்போது ரசிகர்கள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் அடையாளம் தான் தெரிகிறது. 
 
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள இர்ஃபான் பதான் நீங்கள் நிலவில் போட்டி வைத்தால் கூட அங்கும் சிஎஸ்கே ரசிகர்கள் வருவார்கள் என்று தெரிவித்துள்ளார். குஜராத் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் கைதான் ஓங்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva