வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (16:41 IST)

நியுசிலாந்து முன்னாள் வீரர் கால்கள் செயலிழப்பு! மருத்துவமனையில் சிகிச்சை

முன்னாள் நியுசிலாந்து வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் உயிருக்காக போராடி வந்த நிலையில் இப்போது ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.

நியுசிலாந்து அணிக்காக 200க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளிலும், 60 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அல்ரவுண்டர் கிறிஸ் கெய்ன்ஸ். இவர் மேல் மேட்ச் பிக்ஸிங் புகார்கள் எழுந்த நிலையில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

ஆனால் பொருளாதார நிலை காரணமாக லாரிகள் சுத்தம் செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். இந்நிலையில் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது அவர் இதய பாதிப்பு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெறப்படுகிறார். இது சம்மந்தமாக நியுசிலாந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இரு வார சிகிச்சையில் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றும் பொருத்தப்பட்ட உயிர்காக்கும் கருவிகள் நீக்கப்பட்டு விட்டன என்றும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது அவருக்கு சிகிச்சையின் போது முதுகுத்தண்டில் ஸ்டோக் ஏற்பட்டதாகவும் அதனால் அவரின் கால்கள் இரண்டும் செயலிழந்து விட்டதாகவும் அவரின் வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.