தவான் லெவனை வீழ்த்திய புவனேஷ்வர் லெவன்!

mahendran| Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (10:35 IST)

இலங்கை சென்றுள்ள இலங்கை வீரர்கல் தங்களுக்குள்ளாகவே பிரிந்து 20 ஓவர் போட்டியில் விளையாடினர்.

இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் மற்றொரு அணி இலங்கை செல்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவின் மற்றொரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்றும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இலங்கையில் முகாமிட்டுள்ள இந்திய அணியினர் தனித்தனி அணிகளாக தங்களுக்குள் பிரித்துக்கொண்டு 20 ஓவர் போட்டிகள் விளையாடினர். இரண்டு அணிகளுக்கும் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் முதலில் தவான் அணி முதலில் பேட் செய்த நிலையில் 154 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய புவனேஷ்வர் குமார் அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.இதில் மேலும் படிக்கவும் :