1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஜனவரி 2026 (11:58 IST)

ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

ஆஷஸ் தொடரை 4-1  என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..
சமீபகாலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
 
 சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 384 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடியாக ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 567 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட வலுவான முன்னிலை பெற்றது.
 
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 161 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை ஆஸ்திரேலிய வீரர்கள் மிக எளிதாக எட்டி பிடித்து வெற்றியை உறுதி செய்தனர். 
 
இந்த அபார வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சொதப்பல்கள் அந்த அணிக்கு தொடர் பின்னடைவை ஏற்படுத்தின.
 
Edited by Mahendran