யாரும் எடுக்காத சச்சின் மகனை ஏலம் எடுத்த மும்பை அணி!

யாரும் எடுக்காத சச்சின் மகனை ஏலம் எடுத்த மும்பை அணி!
siva| Last Updated: வியாழன், 18 பிப்ரவரி 2021 (20:28 IST)
யாரும் எடுக்காத சச்சின் மகனை ஏலம் எடுத்த மும்பை அணி!
ஐபிஎல் போட்டியின் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் பல முன்னணி வீரர்களை ஏலம் எடுக்க அணிகள் போட்டி போட்டன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இன்றைய ஏலத்தில் ஏலப்பட்டியலில் பெயர் இருந்தது. ஆனால் அவரை கடைசி வரை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது வேறு வழியில்லாமல் மும்பை அணி அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படையான 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது. அர்ஜுன் நல்ல ஆல்ரவுட்னராக இருந்தாலும் அவரை எந்த அணியிலும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஐபிஎல் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய கேதார் ஜாதவ் கூட 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்த நிலையில் முன்னணி வீரர் ஒருவரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் பெரும் 20 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :