ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (21:24 IST)

3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்

zim vs afg
3-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்: ஜிம்பாவே பரிதாபம்
 ஜிம்பாவே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 125 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 126 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 90 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்த தொடரில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளை பெற்று உள்ள நிலையில் தற்போது 3-0என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது