ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (15:12 IST)

ஆசிய கோப்பை: பாகிஸ்தான் தோல்வியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்!

afghan fans
ஆசிய கோப்பை: பாகிஸ்தான் தோல்வியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்!
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
 இந்த நிலையில் பாகிஸ்தான் தோல்வியை ஏற்கனவே இந்திய ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த புதன்கிழமை நடந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த போட்டியில் இரு அணி வீரர்களுக்கும் இடையே பிரசனை நிகழ்ந்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
 
இதனால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைய வேண்டும் என ஆப்கானிஸ்தான் வீரர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர். அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததை அடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் வீதிகளில் அந்தத் தோல்வியை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.