தமிழ் சினிமாவின் மற்றொரு பலவீனம் துறை சார்ந்த அறிவின்மை. திரைக்கதை, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என பெரும் துறைகளை உள்ளடக்கியது சினிமா. சினிமா விமர்சகர்கள் அனைவரும் இந்தத் துறைகள் குறித்த அடிப்படை அறிதல் கொண்டவர்களா என்றால் இல்லை. இதனால் மட்டையடியாக ஒளிப்பதிவு அபாராம் என்றோ படுமோசம் என்றோ ஒரே வரியில் முடித்துக் கொள்கிறார்கள்.