1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அனுமனுக்கு எந்த பொருட்களை கொண்டு வழிபாடு செய்வது நல்லது....?

ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான்.
“ராமா” என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை  மாலையும் நிச்சயம் இடம் பெறும். 
 
துளசி செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.
 
சிவப்பு கொடி முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் 'ராம்' என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்த கொடியை வாகனங்களின் முன் மாட்டிக்  கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.
 
சிந்தூர் அனுமனுக்கு ஆரஞ்சு நிற சிந்தூர் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர  தோஷங்களும் அகலும்.
 
மல்லிகை எண்ணெய் மல்லிகை எண்ணெய்யை மனநிலையை மேம்படுத்த உதவும். அதிலும் சிந்தூர் பொடியை மல்லிகை எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து,  அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.
 
இனிப்புகள் செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு  ஆசீர்வாதமும் கிட்டுமாம்.