ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (09:05 IST)

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கும்பம்! | December 2024 Monthly Horoscope| Aquarius | Kumbam

Kumbam
December 2024 Monthly Horoscope : இந்த 2024ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


 
கிரகநிலை:
ராசியில் சனி - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு(வ)  - ரண ருண ரோக  ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம  ஸ்தானத்தில் கேது - தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சந்திரன் - லாப  ஸ்தானத்தில் சுக்கிரன் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
03-12-2024 அன்று சுக்கிரன்  லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

15-12-2024 அன்று சூர்யன் தொழில்  ஸ்தானத்தில் இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-12-2024 அன்று சுக்கிரன் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
நம்பியவர்களை உயர்ந்த நிலையில் வைத்துப் பார்க்கத் துடிக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம்  எந்த காரியத்தையும் துணிந்து செய்வீர்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம்.

தொழில் செய்பவர்கள் முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள்.

குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மிகவும் நன்றாக இருக்கும்.உங்கள் பிள்ளைகள் படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலமிது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல்நிலையில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

பெண்களுக்கு கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

மாணவர்கள் நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது.

அவிட்டம் 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தார் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும்.

சதயம்:
இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். 

பூரட்டாதி 1, 2, 3  பாதம்:
இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும். வியாபாரத்தில் புது யுக்தியை கையாளுவீர்கள்.

பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தணம், குங்குமம் கொடுத்து  வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
அதிர்ஷ்ட தினங்கள்: 16, 17
சந்திராஷ்டம தினங்கள்: 23, 24