தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் நீங்கள் அடுத்தவர் விஷயத்தில் அநாவசியமாக தலையிட மாட்டீர்கள். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் வாங்குவீர்கள். வருடப் பிறப்பின் போது செவ்வாய் 10-ம் வீட்டில் நிற்பதால் புது வேலைக் கிடைக்கும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.