தோல்வி கண்டு துவளாதவர்களே! பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ! என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனிபகவான் உங்களுக்கு சுகப் பூர்வ புண்யாதிபதியாக வருவதால் நல்லதையே செய்வார். உச்சமாகி சுபத் தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார். | Sani Peyarchi Rasi Palan, Thulam Sani Peyarchi Palan