நிகழும் கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி புதன் கிழமை (21.12.2011) கிருஷ்ண பட்சம் ஏகாதசி திதி சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில்; சுகர்மம் நாமயோகம், பாலவம் நாமகரணம், சித்தயோகத்தில் சூரிய உதயநேரம் போக உதயாதி நாழிகை 2.17க்கு நேரத்திரம், ஜீவனும் நிறைந்த, பஞ்சபட்சியில் காகம் நடை பயிலும் நேரத்தில் புதன் ஓரையில் சரியாக காலை மணி 6.55க்கு சனி பகவான் கன்னி ராசியிலிருந்து தன் உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். சனிபகவான் ஏறக்குறைய 16.12.2014 வரை துலாம் ராசியிலேயே அமர்ந்து தன் ஆதிக்கத்தை செலுத்துவார். | Sani Peyarchi Rasi Palan, Sani Peyarchi Prediction, KP Vidhyadharan