பக்தி நிறைந்த பெண்களின் வேண்டுகோளுக்கு இரங்கி, கண்ணன் நடந்து வருகிறான். அப்போது அவன் நடை அழகையும் வடிவழகையும் கண்டு மெய் மறந்த பெண்கள், கண்ணனை வாழ்த்தி, அதன்பிறகு தங்கள் வேண்டுகோளைத் தெரிவிக்கும் பாடல்.