மனத்தில் தெளிவும் உறுதியும், உள்ளத்தில் இறைவனை நோக்கிய உணர்ச்சித் தூண்டுதல் இவையே யோகத்தின் முதல் இரண்டு கருவிகளாகும்; சாந்தி, தூய்மை, அமைதி (கீழ்த்தரக் கிளர்ச்சிகளை அடக்குவதுடன்) இவையே அமைக்க வேண்டிய முதல் அடிப்படை.