தர்ம யாத்திரை : ஒரு அறிமுகம்!

இந்தியா, பல்வேறு மதங்களையும், நம்பிக்கைகளையும் கொண்ட நாடு... இந்த நாட்டில் ஒவ்வொருவரும் தங்களுடைய மதத்தைக் கடைபிடிக்கும் முழுச் சுதந்திரம் பெற்றுள்ளனர்.

இங்கு ஒவ்வொருவரும் தங்களுடைய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் கடைபிடிக்கும் சுதந்திரம் உள்ளது. இந்த நாட்டில்தான் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும், தங்களுடைய மதச் சின்னங்களை பெருமையுடன் உருவாக்கியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட சின்னங்களின் கட்டுமானத்தில் அவர்கள் கருதும் புனிதத்துவம் உள்ளது என்றாலும், அவைகள் தொடர்பான பல அழகான, ஆச்சரியப்படத்தக்க உண்மைகளும் உள்ளன.

பல்வேறு நம்பிக்கைகளையும், ஆன்மீக அடிப்படைகளையும் தன்னகத்தே கொண்ட இந்த பாரம்பரியத்தின் ஒரு தொடர்ச்சியாக அந்த வித்தியாசமான நம்பிக்கைகளை உங்களுக்கு அளிக்க முன்வந்துள்ளோம்.

"தர்ம யாத்திரை" என்ற பெயரில் நாங்கள் தரப்போகும் இந்த புதிய தொடர், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள் போன்றவை வெளிப்படுத்தும் நம்பிக்கைகளையும், ஆன்மீக உணர்வுகளையும் உங்களுக்கு தொகுத்துத் தரவுள்ளோம்.

தர்ம யாத்திரை எனும் இத்தொடரின் முதல் பகுதியை வரும் திங்கட்கிழமை தருகின்றோம். இது எங்களுடைய உருவாக்கத்தின் துவக்கமாக இருப்பது மட்டுமின்றி, மழைக்காலத்தின் துவக்கமாகவும், அதனை குறிப்பாக உணர்த்தும் மண்வாசனையுடனும் எங்களின் சிறப்புத் தொகுப்பான மகாகாளீஸ்வர் ஜோதிர் லிங்கத்தைப் பற்றிய ஆன்மீக உண்மைகளைத் தரவுள்ளோம்.

நாம் மதித்துப் போற்றும் பல்வேறு நம்பிக்கைகளை உங்களுக்கு அளிப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் எங்களோடு இவ்வுலகத்திற்கு நீங்களும் வாருங்கள்.

Webdunia E Greetings