ஆர்ப்பாட்டம் இல்லாமல் எதையும் சாதிக்கும் நீங்கள், பெரியோர், சிறியோர் என்றில்லாமல் எல்லோரிடமும் பணிவாக நடந்துக் கொள்வீர்கள். புத்தாண்டு பிறப்பின் போது புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.