பேருந்துக்காக காத்திருந்த பெண் கடத்தல் – நகைப்பறிப்பு, பாலியல் வல்லுறவு செய்து இளைஞர்கள் கொடூரம் !

Last Modified வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (11:01 IST)
காரைக்காலில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணைக் கடத்தி நான்கு இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்காலில் வசித்து வருபவர் அந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்குத் திருமணம் ஆகிவிட்டதால் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் அருகில் நின்றுள்ளார்.

அப்போது அங்கே காரில் வந்த நான்கு இளைஞர்கள் அவரைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்திச் சென்றுள்ளனர். ஊருக்கு வெளியே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அவரைக் கடத்திச் சென்ற இளைஞர்கள் அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைப் பறித்துக் கொண்டு, அவரை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்தியுள்ளனர்.

இதனை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டி அவரை அனுப்பியுள்ளனர். நடந்த சம்பவத்தைத் தன் மகனிடம் சொல்ல முடியாத அந்த தாய், பணமும் நகையும் திருடு போய்விட்டதாகக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக போலிஸில் புகாரளிக்க, அவர்கள் கவிதாவிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து போலிஸார் அந்தப் பெண் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் சம்மந்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் விஜய், ரமேஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், மேலும் தலைமறைவான இரண்டு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :