திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (09:18 IST)

புதிய திமுக தலைவர் யார்? நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என தகவல்

திமுக தலைவராக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி முதுமை மற்றும் உடல்நலக்கோளாறு காரணமாக காலமானதை அடுத்து திமுகவின் புதிய தலைவரை தேர்வு செய்ய செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்த செயற்குழு கூட்டத்தில் திமுகவின் புதிய தலைவர் யார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என திமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், செயற்குழு முடிந்தவுடன் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தலைவர் பதவியை ஏற்க அழகிரி உள்பட யாரும் இதுவரை ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், மு.க.அழகிரி மற்றும் கனிமொழிக்கு புதிய பதவிகள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.