பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம்... மகளிர் ஆணையம்!!!

Last Modified வியாழன், 14 மார்ச் 2019 (12:01 IST)
தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம் என மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் முகுந்தன், பிரவீன் ஆகியோரின் பெயரும் அடிப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி ஜெயராமன் இதை முற்றிலுமாக மறுத்தார். இதை அரசியல் ஆக்கப்பார்க்கிறார்கள் என கூறியிருந்தார்.
 
இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. இந்த வழக்கை கோவை போலீஸார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ள நிலையில், இது சம்மந்தமாக மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தினார்.
 
இதுகுறித்து அவர் பேசுகையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருத்தரையும் விடமாட்டோம். எல்லோரையும் விசாரிப்போம். உண்மையை வெளிகொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். தேவைபட்டால் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை நடத்துவோம் என கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :