ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (11:38 IST)

ஜெ.வை யாரும் பார்க்கவில்லை சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம்; கே.சி.வீரமணி

அப்பல்லோ மருத்துவமனையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை, சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம் என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.


 

 
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என பொய் கூறினோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் நேற்று அமைச்சர் கே.சி.வீரமணியும் இதையே கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. உடல்நிலை சரியாகி வந்தால் சசிகலா எங்களை பற்றி ஜெயலலிதாவிடம் போட்டு கொடுத்துவிடுவாரு என்ற பயத்தில் சசிகலா சொன்னதை அப்படியே வெளியே வந்து சொன்னோம் என்றார். 
 
ஜெயலலிதா மறைவுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாட்கள் மர்மமாக உள்ள நிலையில் அமைச்சர்கள் இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.