1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (15:59 IST)

விடாத மழை: செம்பரம்பாக்கத்தில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
வடகிழக்கு பருவமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதீத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மாவட்டங்களில் உள்ள பெருவாரியான ஏரிகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில் சென்னையிம் மிக முக்கியமான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
 
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் விநாடிக்கு 1000 கன அடி என்ற அளவில் திறந்துவிடப்பட்டது. ஆனால் மழை பொழிவு மேலும் அதிகரிக்கும் என்ற காரணத்தால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவை ஆபத்தும் ஏதுமின்றி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. 
 
அதன்படி தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.