திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (15:31 IST)

தாமரை மலர்ந்தால் விருதுநகர் மலரும்.. தமிழ்நாட்டை அழித்த திராவிட கட்சிகள்: ராதிகா

தமிழ்நாட்டை இரண்டு திராவிட கட்சிகள் அழித்து விட்டன என்றும் விருதுநகரில் தாமரை மலர்ந்தால் விருதுநகரும் மலரும் என்றும் நடிகை ராதிகா தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை ராதிகா சரத்குமார் கடந்த சில நாட்களாக தீவிரம் பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் அவருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று விருதுநகரில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தாமரை மலர்ந்தால் விருதுநகரும் மலரும் என்றும் தமிழ்நாட்டை இரண்டு திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து அழித்துவிட்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார்

என்னை உங்கள் தங்கையாக தோழியாக சித்தியாக நினைத்து வாக்களியுங்கள் எனக்கு ஒரு முறை வாய்ப்பிலை தாள் விருதுநகர் நாடாளு உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் விருதுநகரை உயர்த்தி காட்டுவேன் என்றும் தெரிவித்தார்

நாளைய சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நாம் இன்று நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் ஓட்டுக்கள் என்பது விற்பனைக்கு அல்ல என்பதை திராவிட கட்சிகள் உணர்ந்தால் நம் நாட்டிற்கு நல்லது என்றும் அவர் கூறினார்

Edited by Siva