திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (16:46 IST)

கருப்பு உடையில் வந்த வானதியை கலாய்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரிணி..!

இன்று சட்டமன்றத்தில் கருப்பு உடையில் வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணி கலாய்த்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை அடுத்து இன்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடையில் வந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்
 
அந்த வகையில் இன்று சட்டமன்றத்திற்கு வந்த வானதி சீனிவாசனும் கருப்பு உடையில் வந்திருந்த நிலையில் உடனே காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி அவரை பார்த்து நீங்களும் எங்க சைடு தானா கருப்பு உடையில் வந்திருக்கிறீர்கள் என்று கூற அதற்கு சிரித்துக் கொண்டே நான் எதேச்சையாக நான் கருப்பு உடை அணிந்து வந்தேன் என்று சிரித்து கொண்டே சட்டமன்றத்திற்குள் சென்றார்

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran