1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:28 IST)

வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது: முதல்வர் பழனிசாமி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது தற்காலிகமானது என்றும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா மாற்றி அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார் 
 
சட்டப்பேரவையில் இன்று வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது 
 
எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு அதில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது என்றாலும் இந்த மசோதா தற்காலிகமானது என்றும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா மாற்றி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
எனவே தேர்தலுக்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்