ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (09:13 IST)

உலகம் சந்திக்கப் போகும் மிகப்பெரும் எதிர்விளைவு: வைரமுத்து எச்சரிக்கை..!

உலகம் சந்திக்க போகும் மிகப்பெரிய எதிர் விளைவு குறித்த தகவலை கவியரசு வைரமுத்து தனவே சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி காரணமாக மனிதர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. முதல் கட்டமாக சேவை துறையில் மனிதர்களின் வேலைவாய்ப்பு பறிபோன நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் ரோபோக்கள் ஆதிக்கம் உற்பத்தி துறையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனவே வரும் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு என்பதே மிக குறைவாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து கவிதை வடிவில் கவியரசு வைரமுத்து கூறியிருப்பதாவது:

ஓர் எச்சரிக்கை

உலகம் இருபெரும்
துறைகளால் இயங்குகிறது

ஒன்று உற்பத்தித்துறை
இன்னொன்று சேவைத்துறை

சேவைத்துறையில் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்யத்
தொடங்கிவிட்டன ரோபோக்கள்

சில ஆண்டுகளில்
முற்றிலும் பரவிவிடக்கூடும்

உற்பத்தித் துறையிலும்
ரோபோக்கள் ஆதிக்கம் பெற்றுவிடில்
உலகம் சந்திக்கப் போகும்
மிகப்பெரும் எதிர்விளைவு
வேலையில்லாத் திண்டாட்டம்

எண்ணூறு கோடி
மக்கள்தொகை கொண்ட உலகு
என்ன செய்யும்?

அறிவுலகம் ஆட்சி உலகம்
இரண்டும் சந்திக்க வேண்டிய
'காலப்பேரிடர்' இது

Edited by Siva