வேல் போருக்கும் உரியது.. யாருக்கும் உரியது! – வைரமுத்து சமாளிபிகேஷன் ட்வீட்!?

vairamuthu
Prasanth Karthick| Last Modified திங்கள், 25 ஜனவரி 2021 (12:49 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் ஏந்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதுகுறித்து வைரமுத்து ஆதரவு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கையில் வேல் ஏந்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலின் தேர்தலுக்காக திடீர் பக்திமானாக மாறிவிட்டார் என்ற வகையில் பேசி வருகின்றன.

இந்நிலையில் இந்த வேல் சர்ச்சை குறித்து தனது ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து வேல் என்பது கடவுளின் கைப்பொருள் மட்டுமல்ல.. ஆதிகாலத்தில் ஆயுதமாக பயன்பட்டது. போருக்கும், வேட்டைக்கும் வேல் பயன்பட்டது. எனவே வேல் யாருக்கும் உரியது என்று பொருள்படும் வண்ணம் கவிதையை வெளியிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :