அமைச்சர் ஆகப் போறீங்களா உதயநிதி? – சூசகமாக பதில் சொன்ன உதயநிதி!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 4 மே 2021 (12:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பதவி வழங்கப்படுமா என்பது குறித்து அவரே பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் 7ம் தேதி ஆளுனர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் இன்று வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களுடனான சந்திப்பு நடைபெறுகிறது.

இந்நிலையில் திமுக அமைச்சரவையில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின் “அமைச்சரவையில் இளைஞர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. மூன்று நாட்கள் காத்திருங்கள்” என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :