வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூன் 2020 (17:32 IST)

நீங்கள் சொன்ன வதந்தி, உங்கள் பெயரிலேயே உண்மையாகியுள்ளது: உதயநிதி

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
 
முதல்வர் பழனிச்சாமி தனது டுவிட்டரில், ‘எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியதை நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டி ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியதாவது:
 
3 நாட்களுக்கு முன்பு நீங்கள் சொன்ன வதந்தி, இன்று உங்களின் பெயரிலேயே உண்மையாகியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் வைரஸ் குறித்த அறிவியலை ஐந்து மாதங்களாகியும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இந்த குளறுபடிகள் காட்டுகின்றன முதல்வர் அவர்களே. அதனால்தான் சொல்கிறோம்