ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (17:28 IST)

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

தமிழகத்தில் ஏற்கனவே சில வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்,  சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில்,  சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஆகியவை இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளன.
 
அது மதுரை - பெங்களூரு இடையே ஒரு வந்தே பாரத் ரயில், சென்னை - நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளன. இம்மாத இறுதியில் இந்த இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran