திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 ஜூன் 2022 (14:16 IST)

சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது கண்டனத்திற்கு உரியது: டி.ஆர்.பாலு

TR Balu
சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கண்டனத்துக்குரியது என திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவி பேசியபோது இந்தியாவின் வளர்ச்சிக்கு இராணுவம் பொருளாதார வளர்ச்சி ஆகியவை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஆன்மீக வளர்ச்சியும் முக்கியம்
 
நம் ஆன்மீகம் சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. அனைத்து மக்களையும் அரவணைக்கக் கூடியது. இந்த ஆன்மீகம்தான் பல ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு வழிகாட்டி வருகிறது என்று கூறினார் 
 
அவரது இந்த பேச்சுக்கு ஏற்கனவே திருமாவளவன் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்
 
 சனாதனம் குறித்தும் வெடிகுண்டு தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் ஆளூனர் பேசியது கண்டனத்துக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்