வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (17:36 IST)

கரூர் மாவட்ட அரசு கலைக்கல்லூரியில் சுற்றுலா பொங்கல் விழா

கரூர் மாவட்ட அரசு கலைக்கல்லுரியில் சுற்றுலா பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழன் மாணவர்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டார்.
கரூர் தாந்தோண்றிமலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற இக்கல்லுாரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வரும் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லுாரி வளாகத்தில் சுற்றுலா பொங்கள் விழா நடைபெற்றது. 
 
இதில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு அடுப்பை பற்ற வைத்தும், பொங்கள் விழாவை துவங்கி வைத்தார். 
 
அப்போது உற்சாகமடைந்த  மாணவிகள் பொங்கலோ பொங்கல் என்று குழவியிட்ட தங்களடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தமிழர் திருநாள் விழா குறித்து மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.