ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 13 மார்ச் 2017 (23:08 IST)

அப்பல்லோ ரெட்டி மீது குற்ற வழக்கு. வழக்கறிஞர் புகாரால் பரபரப்பு

ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் இருந்து வருவதால் அவருக்கு 75 நாட்கள் சிகிச்சை அளித்த அப்பல்லோ இயக்குனர் ரெட்டி மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் திண்டுக்கல் வளரும் சமூக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் செபாஸ்டின் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 


அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மரணமடைந்த நிலையில் அவர் உடல் மட்டுமே வெளியே கொண்டுவரப்பட்டது .அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். எனவே அப்பல்லோ இயக்குனர் பிரதாப் சி ரெட்டி உள்பட அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை மக்களிடம் விள்க்க வேண்டும்'

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்