திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஜூன் 2023 (09:11 IST)

வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம்.. ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு..!

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பாலம் அமைப்பதற்கு ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன என்பதும் இன்னும் பல மேம்பாலங்கள் கட்டும் திட்டங்கள் உள்ளன என்பதும் தெரிந்ததே.
 
அந்த வகையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீட்டர் நீளத்துக்கு புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதற்காக ரூபாய் நோட்டு 95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஹோட்டலில் இருந்து தொடங்கும் என்றும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடியும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva