1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (07:37 IST)

மாலையில் அனுமதி, இரவில் ரத்து: தமிழக அரசு நடவடிக்கையால் பொதுமக்கள் குழப்பம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 21ஆம் தேதி முடிவடைகிறது. ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே இருப்பதால் அதன் பின்னர் நாட்டில் இயல்பு நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று மாலை தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது இதன்படி 12 தொழிற்சாலைகள் மற்றும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.   இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி ஆகிய 12 தொழிற்சாலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனால் இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஒரு சில மணி நேரங்களில் இந்த உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெற்றது. எனவே மீண்டும் இந்த தொழிற்சாலைகள் திறக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வரும் 21-ம் தேதிக்கு பிறகு அனைத்து தொழிற்சாலைகளும் கடைகளும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொது மக்களிடையே இருந்துவருகிறது இருப்பினும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து வருவதால் மக்கள் கவலையில் மூழ்கி உள்ளனர்