1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:43 IST)

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது - அமைச்சர் உறுதி!

வெள்ளை அறிக்கையை சம்மந்தப்படுத்தி தமிழகத்தில் பேருந்து கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்படாது என தகவல். 

 
கடந்த 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கடந்த 2011 முதல் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செய்த செலவினங்கள் வரவுகள் வட்டி கடன்கள் ஆகியவை குறித்து விரிவாக தெரிவித்திருந்தார். 
 
தமிழகத்தின் பொதுக்கடன் ரூ.5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்து கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து விட்டதாக அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
 
ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கினால் 50 ரூபாய் நஷ்டம் அடைகிறது என்றும் தெரிவித்திருந்தார். இதனால் போக்குவரத்து மற்றும் மின் துறைகளில் மீட்க மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வெள்ளை அறிக்கையை சம்மந்தப்படுத்தி தமிழகத்தில் பேருந்து கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்படாது என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்.